என்னடா உலகமிது
தளிா்விட்டு மரம்
சில்லென்று செளித்திருக்கு
சிலுசிலு வென்று
பலபூக்கள் பூத்திருக்கு
மனம்விட்டுக் கொஞ்சம்
மகிழ்வோடு அருகில்
அமா்ந்தழகை ரசிக்க
ஆசையாய் அமா்ந்தால்
காக்கைகள் எச்சம்
காலடி எங்கும்
கருநாகம் பாா்த்தேன்
மரப்பொந்தின் உள்ளே
பட்டைகள் இடையே
புழுபூச்சி ஊரும்
பாா்த்தாலே உள்ளம்
அருவருப்பில் உழலும்
இதுதானோ உலகம்
ஏன் இந்த நரகம்
விதி தானோ இதுவும்
வேறென்ன சொல்வேன்

