தெய்வேந்திரம் ஈஸ்வரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தெய்வேந்திரம் ஈஸ்வரன் |
இடம் | : அச்சுவேலி தெற்கு அச்சுவே |
பிறந்த தேதி | : 05-Nov-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 248 |
புள்ளி | : 27 |
ஆசிரியா்
புனித தெரேசாள் மகளிர் கல்லூரி
அச்சுவேலி
வாழ்க்கை என்னும் பாதையில்
நாம் முன்னோக்கிச் செல்கையில்
பல படிகளைத் தாண்ட நேரிடுகிறது...
ஆனால்...
துரதிஸ்டம் என்னவென்றால்
படிகள் எல்லாமே
ஒரே அளவினதாய் அமைந்து விடுவதில்லை...
சில படிகள் அடி எடுத்து வைக்கும் தூரத்திலும்
சிலதோ.... கைக்கெட்டும் தூரத்திலும்
இருக்கின்ற போதிலும்
சில படிகள்
கண்ணுக்கெட்டாத் தூரத்திலும் அமைந்துவிடுகின்றன...
அந்நேரம்
படிகளை எண்ணி
மாற்று வழி தேடி நடக்கையிலே
நம் வாழ்வும் முடிந்து விடுகின்றதே...
எல்லாமும் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது – ஆனால்
நாங்கள் மட்டும் ஊர்ந்துகொண்டிருக்கின்றோம்…
நோய் நொடி துன்பமென்று எதுவந்த போதும் – உலகம்
சுற்றும் வேகத்தைக் குறைக்கவில்லை
மனிதரும் அதே வேகத்தை மறக்கவில்லை – ஏனோ
நாங்கள் மட்டும் இன்னும் ஊர்ந்துகொண்டிருக்கின்றோம்....
எழுவதற்கு சக்தியில்லை என்றெண்ணி
அழுது கிடக்கின்றோமோ
இல்லை
எழுந்து எழுந்து விழுவதால் இனி
எழவே வேண்டாம் என்று நினைத்தோமோ...
எதுவென்று தெரியவில்லை– ஏனோ
நாங்கள் மட்டும் இன்னும் ஊர்ந்துகொண்டிருக்கின்றோம்....
எனக்கும் ஓர் ஆசையுண்டு
பாரதிபோல் பாவெழுத
அதற்கோர் தடையென்றால்
என்னுள்ளே எழுந்தயக்கம்
இதற்கேன் வீண்பொழுது
உனக்கேன் வீண்வேலை
கிடக்கே பலசோலி
அடபோடா படுபோய்நீ
என்றென் உளம் சொல்ல
உணர்வும் தான் தள்ள
நன்றே எடுத்த தாளை
மடித்தே மூடிவைத்து
என்றும் போல் இன்றும் நான்
எழுதாமல் விட்டுவிட்டேன்...
இல்லை இல்லையில்லை
எழுதித் தொலைக்கின்றேன்... – இதை
எழுதித் தொலைத்துவிட்டேன்
விழி சொரிந்த நீரெடுத்து
எழுதிடத்தான் வழி இருந்தால்
கவி வடித்துக் காகிதத்தில்
கொட்டி யதைத் தீர்த்திருந்தால்
காவியமோ ஓவியமோ
நிச்சயமாய் ஆயிருக்கும்...
விழி வழியும் நீரெடுத்து
வரைவதற்கு வழியுமில்லை - அந்நேரம்
கவி வடிக்கக் கைகளிலே
காகிதமோ ஏதுமில்லை - மனதிலே
எழுதி வைத்த சில வரியும்
என்னிடமோ கூட இல்லை
வலிகொடுத்த சம்பவங்கள்
என் மனதில் பதியவில்லை...
இதை எடுத்துச் சொல்லிவிட
என்மனதில் கோடி ஆசை - ஏனோ
அருகிருந்து கேட்டிடவும்
ஆவலோடு யாருமில்லை...
பொருள் பதிந்த வினாத் தொடுத்தால்
பகிர்வதற்குக் கோடியுள்ளம் - இங்கே
விலையில்லா என் வலியைக்
கேட்பவர்க்கு என்ன லாபம்...
கரைபுரண்டு ஓடிக்
களைப்படைந்து வெள்ளம்
நிலைமறந்து தூங்கும்
நிலையதுபோல் வாழ்க்கை
சிலையதுவம் கூட
சில நொடிகள் பதைக்கும்
இலையுதிர்த்த மரமும்
இவன் கதையில் துடிக்கும்
விலைகொடுத்து வாங்கி
விடலாமோ வாழ்வை
அதை இழந்த பின்னே
இனி எதற்கு வேட்கை...
SERVER : வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க?
PERCY PAL : தோசை வேணும்.
SERVER : சாதா தோசையா? வெங்காய தோசையா?
PERCY PAL : வெங்காய தோசை.
SERVER : சின்ன வெங்காயம் போட்டதா? பெரிய வெங்காயம் போட்டதா?
PERCY PAL : சின்ன வெங்காயம்.
SERVER : சாதா வெங்காயமா? நாட்டு வெங்காயமா?
PERCY PAL : நாட்டு வெங்காயம்.
SERVER : சின்னதா நறுக்கியதா? பெருசா நறுக்கியதா?
PERCY PAL : சின்னதா நறுக்குனது.
SERVER : வெங்காயம் அதிகமா போடவா? கம்மியா போடவா?
PERCY PAL : அதிகமா.
SERVER : வெங்காயத்துக்கு மூக்கு அறுத்துட்டு போடவா? அறுக்காம போடவா?
PERCY PAL : அறுத்துட்டே போடு.
SERVER : சிவப்பு வெங்கா
........................................................................................................................................................
“ ஒரு வான்கோழி வாங்கிட்டு வரலாண்டா.. ” நச்சரித்த சோமுவுடன் கடைத்தெரு போனான் பாலு. நாலைந்து கடைகள் ஏறி இறங்கியும் வான்கோழி கிடைக்கவில்லை.
“ சே..! திருவண்ணாமலை பின் தங்கிய மாவட்டம்கிறது சரியா இருக்கு..! ” சலித்துக் கொண்டான் சோமு.
அப்படி பின் தங்கிய மாவட்டமாக திருவண்ணாமலையை ஒரே முட்டில் ஒதுக்கி விட முடியாது என்பது போல வேலையத்த ஒரு ஜெர்மன்காரன் ஷாட்ஸ் மட்டும் அணிந்து, நெற்றி நிறைய திருநீறு பூசி, பறவைகளை விற்றுக் கொண்டிருந்தான். அவனிடம் வா
களிமண்ணில் பிடித்து வைத்து
>>>>>கடவுளென்று கும்பிடுவார் !
கருவில் சுமந்து வளர்த்தவளை
>>>>>நிர்கதியாய் விட்டிடுவார் ...!!
பிடித்த நடிகர் கட்அவுட்டுக்கு
>>>>>பாலபிஷேகம் பண்ணிடுவார் !
பசியால் குழந்தை அழுதாலும்
>>>>>பாராமுகமாய் சென்றிடுவார் ...!!
மதுவிலக்கு பற்றி மேடையிலே
>>>>>வாய்கிழியப் பேசிடுவார் !
மாலைப்பொழுது கழிந்து விட்டால்
>>>>>மதுகுடித்து சரிந்திடுவார் ...!!
அன்னை மொழிக்கீ டில்லையென
>>>>>அழுத்தமாகச் சொல்லிடுவார் !
ஆங்கில வழிப் பள்ளியிலே
>>>>>அவர்பிள்ளை படித்திடுவார் ...!!
லஞ்சம் பெறுவது குற்றமென
>>>>>லட்சியத்துடன் முழங்கிடுவார் !
லட்சங்கள் வாரிக்கொடுத்து
"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச