எனக்கே நான் எதிரி
எனக்கும் ஓர் ஆசையுண்டு
பாரதிபோல் பாவெழுத
அதற்கோர் தடையென்றால்
என்னுள்ளே எழுந்தயக்கம்
இதற்கேன் வீண்பொழுது
உனக்கேன் வீண்வேலை
கிடக்கே பலசோலி
அடபோடா படுபோய்நீ
என்றென் உளம் சொல்ல
உணர்வும் தான் தள்ள
நன்றே எடுத்த தாளை
மடித்தே மூடிவைத்து
என்றும் போல் இன்றும் நான்
எழுதாமல் விட்டுவிட்டேன்...
இல்லை இல்லையில்லை
எழுதித் தொலைக்கின்றேன்... – இதை
எழுதித் தொலைத்துவிட்டேன்