நாங்கள் மட்டும் ஊர்ந்துகொண்டிருக்கிறோம்
எல்லாமும் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது – ஆனால்
நாங்கள் மட்டும் ஊர்ந்துகொண்டிருக்கின்றோம்…
நோய் நொடி துன்பமென்று எதுவந்த போதும் – உலகம்
சுற்றும் வேகத்தைக் குறைக்கவில்லை
மனிதரும் அதே வேகத்தை மறக்கவில்லை – ஏனோ
நாங்கள் மட்டும் இன்னும் ஊர்ந்துகொண்டிருக்கின்றோம்....
எழுவதற்கு சக்தியில்லை என்றெண்ணி
அழுது கிடக்கின்றோமோ
இல்லை
எழுந்து எழுந்து விழுவதால் இனி
எழவே வேண்டாம் என்று நினைத்தோமோ...
எதுவென்று தெரியவில்லை– ஏனோ
நாங்கள் மட்டும் இன்னும் ஊர்ந்துகொண்டிருக்கின்றோம்....