எண்ணுகிறார்களோ
ஒன்றாக வாழ்ந்த மக்கள்
வேற்றுமையால்
வேறுபட்டு அண்டை நாடாகப்
பிரிந்து வாழ்ந்தாலும்
தன்னின மக்களென
அன்போடு அரவணைக்காமல்
அவர்களைக் கொள்வது தான்
கொள்கையோ !
ஒன்றுபட்டு வாழ்ந்ததை
உணர்ந்து பார்க்காமல்
வேரோடு அழிக்க எண்ணுவது
வேதனைத் தரவில்லையா ?
இயற்கை ,உலகையே
அழித்து நாசமாக்குவதுபோல்
இவர்களும் மக்களை அழித்து
இயற்கையின் கணக்கில்
சேர்த்துவிட எண்ணுகிறார்களோ !