அவளின் சதை பிண்டம்

யாக்கையை துய்க்க நினைக்கும் பிணதின்னி கழுகளே !!! கொங்கையை கடித்து குதறி யோனியை சிதைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட வீரர்களே சற்று களைப்பாறுங்கள் அவள் இறந்து விட்டாள் !! மண்ணோடு மக்கும் சதை பிண்டத்தை வன்கலவி செய்து ஆட்கொண்டு விட்டீர்கள்...!!! போரில் தோல்வியடைந்த அப்பெண்ணின் ஆன்மா விடைபெற்று விட்டது !!! அடடே போரில் எவ்வளவு கடினபட்டு விட்டீர்கள் அவளின் பாதங்களை இருவர் பிடித்தும் கரங்களை இருவர் பிடித்தும் அழுகுரலை அடக்கியும் ஆட்கொள்ள நேரிட்டது.. போதும் களைப்பாறுங்கள் அந்த பாவி மகள் சதை பிண்டத்தை விட்டு தப்பிவிட்டாள்!! குடும்ப பாரத்தை தலையில் சுமந்து கொண்டு குருட்டு தாயின் கண் பார்வைக்காகவும்,குடும்ப பசிபட்னியை போக்கவும் பல கனவுகளோடு சென்ற மகளை எண்ணி வீதியில் காத்திருக்கும் தாயின் குரலும், பசியில் அக்காவின் வரவை எண்ணி வாடும் தங்கைகளின் குரலும் அப்பாவிக்கு கேட்டது போல் அதான் தாங்களிடம் இருந்து மீள முடியாத போதும் சதை பிண்டத்தை விட்டுவிட்டு அவளது ஆன்மா சென்று விட்டது!! எண்ணற்ற கனவுகளை சுமந்துகொண்டிருந்த அப்பாவி ஆன்மா எங்கு அலைகிறதோ.. எப்படி தவிக்கிறதோ!! இருக்கட்டும் தாங்கள் களைப்பாறுங்கள்!!


- கௌசல்யா சேகர்

எழுதியவர் : Kowsalya sekar (20-Jan-23, 3:40 am)
பார்வை : 100

மேலே