ஒரே பாரதம் ஒரே தமிழகம்

ஒரே பாரதம் ஒரே தமிழகம்
ஒற்றுமைதானே நாட்டின் லட்சியம்
நமது கண்ணிலே பேதங்கள் இல்லை (2)
நாம் எல்லோரும் இந்திய மக்கள் (2)
(ஒரே பாரதம் ஒரே தமிழகம்)

மகாத்மா காந்திதான் அன்பால் வென்றார்
சாதிமத பேதமில்லை மனிதர்கள் என்றார் (2)
வள்ளலார் வழிகொண்டு வாழும் முறை கண்டு
எத்தனை முன்னோர்கள் தத்துவம் சொன்னார்கள்
உலகமக்களே ஓரினம் என்று சொன்னானே
மகாகவி பாரதி அன்று
(ஒரே பாரதம் ஒரே தமிழகம்)

ஓடும் மேகங்கள்போல் சேர்ந்தாடுவோம்
உழைப்பும் கலையும் நமது கண்கள் என்போம் (2)
மொழிகள் பல உண்டு அவற்றில் சுவை உண்டு
உலகம் போற்றட்டுமே பாரதம் சிறந்ததென்று
காஷ்மீர் அங்கே குமரிமுனையிங்கே
இந்தியத்தாய் இன்றி வளர்ச்சியும் எங்கே?
(ஒரே பாரதம் ஒரே தமிழகம்)

மாநிலங்கள் பல இங்கே உண்டு
மானிட தர்மங்கள் எங்கும் ஒன்று (2)
கல்வியும் பணியும் பெற பறந்திடத்தடை ஏது
பரந்திடும் உலகினிலே பிரிவுகள் கிடையாது
நமது தாயகம் பாரத தேசம் (2)
எந்நாளும் இசைப்போம் அகிம்சை கீதம் (2)
(ஒரே பாரதம் ஒரே தமிழகம்)

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (21-Jan-23, 7:17 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 242

மேலே