இருளின் நிழல்

சிகரெட்டாக இருக்கலாம்
அடுப்பாக இருக்கலாம்
தீபமாக இருக்கலாம்
வெல்டிங் டார்ச்சாக இருக்கலாம்
கொள்ளியாகவும் இருக்கலாம்
காரணத்தின் நிமித்தமாகவே
என்றாலும்
கொளுத்தப்பட்டதன் காரணத்தை
ஒருபோதும் அறிவதில்லை
கருகிய தீக்குச்சிகள்!

எழுதியவர் : ஜ. கோபிநாத் (23-Jan-23, 10:55 am)
சேர்த்தது : Gopinath J
Tanglish : erulin nizhal
பார்வை : 48

மேலே