சோகமே வாழ்வானால்

விழி சொரிந்த நீரெடுத்து
எழுதிடத்தான் வழி இருந்தால்
கவி வடித்துக் காகிதத்தில்
கொட்டி யதைத் தீர்த்திருந்தால்
காவியமோ ஓவியமோ
நிச்சயமாய் ஆயிருக்கும்...

விழி வழியும் நீரெடுத்து
வரைவதற்கு வழியுமில்லை - அந்நேரம்
கவி வடிக்கக் கைகளிலே
காகிதமோ ஏதுமில்லை - மனதிலே
எழுதி வைத்த சில வரியும்
என்னிடமோ கூட இல்லை
வலிகொடுத்த சம்பவங்கள்
என் மனதில் பதியவில்லை...

இதை எடுத்துச் சொல்லிவிட
என்மனதில் கோடி ஆசை - ஏனோ
அருகிருந்து கேட்டிடவும்
ஆவலோடு யாருமில்லை...

பொருள் பதிந்த வினாத் தொடுத்தால்
பகிர்வதற்குக் கோடியுள்ளம் - இங்கே
விலையில்லா என் வலியைக்
கேட்பவர்க்கு என்ன லாபம்...

எழுதியவர் : தெய்வ ஈஸா (21-Feb-20, 8:53 pm)
பார்வை : 148

மேலே