மரண விலாஸ் ஹோட்டல்
SERVER : வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க?
PERCY PAL : தோசை வேணும்.
SERVER : சாதா தோசையா? வெங்காய தோசையா?
PERCY PAL : வெங்காய தோசை.
SERVER : சின்ன வெங்காயம் போட்டதா? பெரிய வெங்காயம் போட்டதா?
PERCY PAL : சின்ன வெங்காயம்.
SERVER : சாதா வெங்காயமா? நாட்டு வெங்காயமா?
PERCY PAL : நாட்டு வெங்காயம்.
SERVER : சின்னதா நறுக்கியதா? பெருசா நறுக்கியதா?
PERCY PAL : சின்னதா நறுக்குனது.
SERVER : வெங்காயம் அதிகமா போடவா? கம்மியா போடவா?
PERCY PAL : அதிகமா.
SERVER : வெங்காயத்துக்கு மூக்கு அறுத்துட்டு போடவா? அறுக்காம போடவா?
PERCY PAL : அறுத்துட்டே போடு.
SERVER : சிவப்பு வெங்காயமா? வெள்ள வெங்காயமா?
PERCY PAL : சிவப்பு.
SERVER : நெடி அதிகமா உள்ளதா? கம்மியா உள்ளதா?
PERCY PAL : அதிகமா உள்ளது.
SERVER : உரம் போட்ட வெங்காயமா? போடாத வெங்காயமா?
PERCY PAL : உரம் போடாதது.
SERVER : வெங்காயத்த கழுவிட்டு போடவா? தொடச்சிட்டு போடவா?
PERCY PAL : கழுவிட்டு போடு.
SERVER : வெங்காயம் நல்லா வேகணுமா? கம்மியா வேகணுமா?
PERCY PAL : நல்லா வேகணும்.
SERVER : வெங்காயத்துக்கு எண்ணெய் ஊத்தவா? நெய் ஊத்தவா?
PERCY PAL : நெய்.
SERVER : சாதா நெய்யா? பாக்கெட் நெய்யா?
PERCY PAL : பாக்கெட் நெய்...தம்பி போதும்பா ! நல்லாபசிக்குது போயி டிபன் எடுத்துட்டு வா.!
SERVER : சரி சார்.இருங்க கொண்டு வாறேன்.
(சாப்பிட்ட பிறகு)
SERVER : இந்தாங்க சார் பில்.மொத்தம் 50 ரூவா.
PERCY PAL: கேஷா வேணுமா? செக்கா வேணுமா?
SERVER : கேஷ்
PERCY PAL :இந்தியா கேஷ்வேணுமா? வெளிநாடு வேணுமா?
SERVER : இந்தியா கேஷ்.
PERCY PAL : பேண்ட்ல இருந்து வேணுமா? சட்டபைலயிருந்து வேணுமா?
SERVER :சட்டபைல இருந்து.
PERCY PAL : சில்லரையா தரவா? நோட்டா தரவா?
SERVER : நோட்டா தாங்க.
PERCY PAL : பழயை நோட்டா? புதிய நோட்டா?
SERVER : புதியது.
PERCY PAL:மடித்த நோட்டா? மடிக்காத நோட்டா?
SERVER :மடிக்காத நோட்டு.
PERCY PAL: காந்தி படம் போட்டது? போடாததா?
SERVER : காந்தி படம் போட்டது.
PERCY PAL : காந்தி படத்துல கண்ணாடி போட்டதா? கண்ணாடி போடாததா?
SERVER : கண்ணாடி போட்டது.
PERCY PAL : சாதா கண்ணாடியா? கருப்பு கண்ணாடியா?
SERVER : சாதா கண்ணாடி.
PERCY PAL : கண்ணாடில ஓட்டை விழுந்ததா? வீழாததா?
SERVER : சார்ர்ர்ர்ர்ர்ர் என்னை மன்னிச்சிடுங்க உங்ககிட்ட தெரியாம வாய கொடுத்துட்டேன் சார்
நீங்க போங்க சார்.நானே உங்க பில்ல கட்டிக்கிறேன்.!