வாழ்வு தந்த பாடம்
கரைபுரண்டு ஓடிக்
களைப்படைந்து வெள்ளம்
நிலைமறந்து தூங்கும்
நிலையதுபோல் வாழ்க்கை
சிலையதுவம் கூட
சில நொடிகள் பதைக்கும்
இலையுதிர்த்த மரமும்
இவன் கதையில் துடிக்கும்
விலைகொடுத்து வாங்கி
விடலாமோ வாழ்வை
அதை இழந்த பின்னே
இனி எதற்கு வேட்கை...