உன்னால் நான்

பொர்ணமி நிலவாய்
தினம் மின்னும்
உன் முகம் பார்க்கையில் -நான்
உருகும் பனியானேன்...

பாலில் புதையுண்ட
கரு வைரமாய்
உன் இரு விழி பார்க்கையில் -நான்
உறையும் நீரானேன் ...

மயில் தோகைக்கு
சிறு மை சேர்த்தால் போல்
உன் கரு இமை பார்க்கையில்-நான்
மழையில் தீயானேன்...

வெள்ளி மலைகளை பிளந்து
நட்ட மதில்களாய்
உன் வெண் பற்கள் பார்க்கையில் -நான்
பாலில் பழமானேன் ...

விண்ணின் வானவில்லுக்கு
கரு மைகள் பூசி
உன் புருவமாய் பார்க்கையில் -நான்
காற்றில் இலையானேன்...

மஞ்சள் பிறக்கும்
மூலிகை தோப்பாய்
உன் கன்னம் பார்க்கையில்-நான்
ஆன்மா இழந்த உடலானேன் ...

சிவந்த ரோஜாக்கள்
சிதறாமல் இருக்கும்
உன் இதழ்கள் பார்க்கையில் -நான்
மண்ணில் இருந்து விண்ணை தொட்டேன்

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (22-Apr-14, 10:23 pm)
Tanglish : unnaal naan
பார்வை : 98

மேலே