புத்தகத் திருநாள்

புத்தகம்

புரட்டப் புரட்டப்
புதுப் புதுக் கோலம்

திறக்கத் திறக்க
ஈர்த் திடும் ஜாலம்

படிக்கப் படிக்கப்
தேன் ஊரும் ஆறு

எடுக்க எடுக்க
அழகு வண்ணச் சாறு

தனிமை வேளையில்
இனிமை தரும் தோழன்

அற்புத வார்த்தையால்
நமைக் கொள்ளும் காலன்

அறிஞர் பலரின்
அரும்புக் கை வண்ணம்

பாராட்டப் பார்கிறேன்
மனதில் தோன்றவில்லை எண்ணம் !

எழுதியவர் : விவேக்பாரதி (23-Apr-14, 3:32 pm)
Tanglish : puthagath thirunaal
பார்வை : 118

மேலே