எங்கே தொலைந்தோம்

விவாதப் பேச்சுக்களில்
விளைந்தவர் கூட்டம்

விமர்சனங்களை விமர்சிக்கும்
வித்தகர் கூட்டம்

அரசியல் அலசலில்
தெளிந்தவர் கூட்டம்

சினிமாவோ கிரிக்கட்டோ
உள்ளுரோ உலகமோ

எவரின் யுக்தியையும்
எதனின் சக்தியையும்

எடைபோடும் வசைபாடும்
எளியவர் கூட்டம்

அவரவர் வாழ்வில்
அவசரக் கனவில்

ஒரு வீடு ஒரு கார்
மற்றும்
ஒரு சாண் வயிறில்

தலை புதைத்து
களைத்துத் தொலைகிறது!!!
கர்மம் தொலைக்கிறது!!!

எழுதியவர் : சர்நா (24-Apr-14, 11:28 am)
பார்வை : 88

மேலே