என் உயிர் நண்பன்

அரபு நாட்டிலே ...
அடிக்கும் வெயிலிலே
தூற்றும் காற்றினிலே
உறைய வைக்கும் குளிரினிலே -இவன்
நான் கண்டெடுத்த முத்து !

இவனுக்கு
பெண்களிடத்தில்
தனியொரு பாசம்
தன்னைப் பெற்றவளும்
ஒரு தாய் என்பதால் ...!

;'தாயிற் சிறந்த கோவிலுமில்லை '-என்ற
தாரக மந்திரத்தை உணர்ந்தவன் ,
தாயின் நினைவுகள்
மலரும் நினைவுகளாகத் தோன்றி
மனதை வருக்திக் கொள்ளும்
தன்மை உள்ளவன் !

இதழோரத்தில் சிறு புன்னகை
எப்போதும் குடி கொண்டிருக்கும்
இமைகள் மூடாமல் மனம்
எங்கோ சென்று கொண்டிருக்கும் ...!

கனவுலகத்தில் நாட்டம் உண்டு
கவிதையிலே விருப்பம் உண்டு -இக்
காவிய மன்னனுக்கு
காதலிலும் தோல்வியுண்டு !

சிரித்து சிரித்து பேசுவான்-நம்மையும்
சிரிக்க வைப்பான் -சில சமயம்
சிந்திக்கவும் வைப்பான்
இந்தச் சிந்தனையாளன் .!

ஜாதிகள் இல்லையடி பாப்பா
பாரதியின் வரிக்கு உயிர் கொடுப்பவன்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் -என
ஓங்கி குரல் கொடுப்பவன் .

உடையிலே ஒரு கவர்ச்சி உண்டு
நடையிலே ஒரு பாவம் உண்டு
பார்வையிலே ஒரு கனிவு உண்டு
பேச்சிலே ஒரு தெளிவு உண்டு .

கருமை நிறத்தவன் -மனமோ
வெள்ளை நிறத்தவன் -ஏனோ
சிவப்பு நிறத்திற்கு இன்னும்
இவன் மீது மோகம் ..!

எதிர் நீச்சல் போடும் இவனுக்கு
எதிர்காலம் இருட்டாக இருக்கப் போவதில்லை
வாழ்வு வளமுடன் விளங்க
வருங்காலம் கரம் கொடுக்கும் .....!

இருபத்தந்தை தாண்டும் இவன்
இருக்கும் நாளனைத்தும்
இன்பமாக ...நலமாக இருக்க
இறைவனை வேண்டுகிறேன் ...

வாழ்க வளமுடன் !

(1990;களில் சவூதி அரேபியாவில் பணி செய்து கொண்டிருந்த போது ..நட்பான என் நண்பர் R,பாஸ்கர் .திருவொற்றியூர் என்பவருக்கு நான் எழுதிய வாழ்த்து மடல் )

எழுதியவர் : மு.பாலு (24-Apr-14, 3:40 pm)
சேர்த்தது : முபாலு
Tanglish : en uyir nanban
பார்வை : 73

மேலே