வரவேண்டி வரம் கேட்போம்
பல நாட்கள் காத்திருந்து
பொறுப்போடு ஓட்டும் போட்டோம்—இனி
நடப்பதெல்லாம் நன்மைக்கேவென
நிம்மதியாய் வாழ்ந்திருப்போம்
திறமையுள்ள பெருமக்கள்
வென்றிடவே வாழ்த்திடுவோம்
வளமான வாழ்க்கை வேண்டி
ஒற்றுமையாய் உழைத்திடுவோம்
புழலுக்கு போகாத புண்ணியர்களும்
ஊழல் பண்ணாத மனிதர்களும்—சபைக்கு
வரவேண்டி வரம் கேட்போம்
நாடு நலமுற நல்லதையே எண்ணிடுவோம்
வஞ்சமில்லா நெஞ்சமும்
தன்னலமற்ற நல்லவரை வரவேற்று
நன்னெறி வழியில் நற்திட்டம் தீட்டி
நாடு செழித்திட போற்றிடுவோம்.