நுனிக்கறை

கொட்டிக் கவிழ்த்து
கூடிக் குலவையிட்டு
ஓலக் கும்மாளத்தோடு
ஊரெல்லாம் சுவரொட்டி,

அவர் ஓர் நாள் தீட்டியதோ
விரல் நுனியில்
கருப்பாய் ஒரு கறை.
நாமாய்
சார்த்திக் கொள்வதோ
பட்டையாய் ஓர்
வெள்ளை நாமம்...
நெற்றியெங்கும்...
நாளை வரும்
ஐந்தாண்டுகளுக்கும் சேர்த்து !

எழுதியவர் : நேத்ரா (24-Apr-14, 5:21 pm)
சேர்த்தது : Nethra
பார்வை : 127

மேலே