பருவக் காதல்
உன் உருவம் பார்த்து
வரவில்லை
அவன் என்ன அருவனா
உன் பருவம் பார்த்து
வரவில்லை
அவன் என்ன சிறுவனா
உன் சர்வம் பார்த்து
வந்தது
சத்திய சாத்தியக் காதல்
தென் மேல் திசையில்
உன் மேல் பட்டதால்
காற்றும் பருவமடைந்தது.
தென் மேல் காற்று
மண் மேல் ஊற்றும்
மழையும் பருவமுற்றது
பருவக் காற்றும் சற்றே
பருவ மழையும் சேற்றே
பரவும் மனது அற்றே
சூல்கொண்டது சூறாவளியாய்.

