கண்களில் கண்ணீர் செந்நீரை கொட்டுதடி 555
அழகே...
என் விரல்கள் உன்
மேனியில் பட்டால்...
உன் மேனி
நோகுமென்று...
நாம் சந்தித்த
போதெல்லாம்...
மயிலிறகால்
உன்னை வருடினேன்...
பூ போன்ற
உன் மேனியில்...
இன்று விரல்கள்
பதிந்ததென்னடி...
நீயும் நானும் விரல்
கோர்த்து நடந்தோமடி...
கோவில் திருவிழாவில்...
இன்று நான் மட்டும்
நடை போடுகிறேனடி...
உன் நினைவுகளோடு
தனிமையில்...
கோவிலை கூட
காண முடியாமல்...
நீ துடிகிறாயடி
உன் புகுந்த வீட்டில்...
நம் பிரிவில் கூட
வலிகள் இல்லையடி...
உன் சந்தோசம்
எண்ணி...
இன்று நீ அனுபவிக்கும் துயரில்
நான் துடிகிறேனடி...
கண்களில் கண்ணீர்
இல்லாமல் சென்னீராய் கொட்டுதடி.....