மதம் பிடித்த மனிதா

மதம் ..................
என்று சொல்லி
மதம்பிடித்து அலையும்
மனிதர்களே ...

நீ ............
விதி வந்து
சாவதை விட
மதத்தினால்
மதி இழந்து
சாவதே !
மனவேதனை
தருகிறது ?

நீ .....பிறந்த இடமே
உனக்கு
சொந்தமிள்ளதபோது
அங்கு ...ராமர் பிறந்தாள்
என்ன ?
பாபர் பிறந்தாள்
என்ன ?

இறந்த வனுக்கு
கோவிலை
கட்டுவதைவிட
இருப்பவனுக்கு
குடி இருக்க
வீட்டை கட்டு

மதவெறி ........
மண்ணிலே
இருக்கும்வரை
கருவிலே இருப்பவனைகூட
கலவரகாரர்கள்
கலைத்து விடுவார்கள்

இப்பூமியில் ...
மதங்கள் பிறக்காமல்
மனிதர்கள் மட்டும்
பிறக்கவேண்டும் ...!

எழுதியவர் : இரா .மாயா (25-Apr-14, 6:48 pm)
சேர்த்தது : eraamaya
பார்வை : 55

மேலே