சித்திரைத் திருவிழாவும் அழகரும்
சித்திரைத் திருவிழா மதுரையிலே ,
எத்திசையும் மக்கள் கூட்டம் .
அழகர் பச்சை பட்டுக் கட்டி குதிரை
வாகனத்தில்,
ஆற்றில் இறங்குகிறார் .
பக்தர்கள் பலரும் அழகர்
வேடத்தில் ,
அலை மோதும் கூட்டத்தில்,
அவன் பெயர் சொல்லியே அழைக்கின்றார்.
தினம் காத்திடுவான், என்றே நினைக்கின்றார்.
மனம் ஒன்றி வணங்கிடுவோர்,
மலரும் வாழ்வு கண்டிடுவார் .
மறவாமல் தந்திடுவான்.
காத்திடுவான் உள்ளத்தை.
கலைந்திடுவான் கள்ளத்தை .
அலை மோதும் கூட்டம் கண்டு ,
அழகருக்கு ஆனந்தம்.
வாழ்வு மலர ,வாக்கு மலர,
வாழும் பூமியும் மலர,
வணங்குவோம் அழகரையே !
ஆனந்தம் தந்திடுவான் .