விளையாட்டாய் விளையாட்டு
புழுதி மணல்
பூசிக்கொண்டு
உச்சி வெய்யில்
துச்சமாக்கி
சைக்கிள் டயர் உருட்டிக் கொண்டு
ஓடியாடி விளையாடி
கோணப்பன் குளத்தில்
குட்டிகரணம் அடித்து
கொடுக்காப்புளி காய்பறிக்க
ஒருவர் தோள் ஒருவர் ஏறி
உழுந்து எழுந்து
உதை வாங்கி
ஓடி ஒளிந்த
காலம் இனி வாராதோ?
கத்திரி வெய்யில் தெரியாமல்
பாண்டி கோலி பம்பரம்
கிட்டிப்புல் கிளியாந்தட்டு
விதம் விதமாய் விளையாடி
களித்திருந்த காலமது ப்்
நோண்டிநோண்டி நுங்கு திண்று
நுங்கு மட்டை வண்டி செய்து ்
ஊர் சுற்றி ஓய்ந்துப்போன
என் குழந்தைப் பருவ நினைவுகள்
காட்சிப் படுத்தப்படா
காவியங்கள்......
நிறம் மாறா ஓவியங்கள்