சித்திரம் விசித்திரம் இங்கு

விசித்திர சாலைகளில்
கேலி சித்திரங்களை
எவரோ ஒரு பித்தர்
வரைந்துக்கொண்டிருக்க
யாரோ சிலர்
நாணயங்களை
நாணயமில்லாமல் விட்டெறிவர்.

விட்டெறிந்த
காசுகளின் விசையில்
பசிக்கொடுமையெனும்
காயங்கள் ஆறும் பித்தனுக்கு..!
ரசனையற்ற வெகுமதியில்
எரிந்து, நொந்து
ரணங்கள் ஆகும் சித்திரத்திற்கு..!

நானும் பித்தன் தான்.
என் மனமென்ற
சித்திரத்தை ரசிப்பவர்கள்
எவருமில்லை...!
இதுவரை ரசித்தவர்களுக்கும்
புரிந்திட பக்குவமில்லை.

பாவம் ...!
அவர்களை
சொல்லி குற்றமில்லை..!

நட்புக்கும் அன்புக்கும்
அர்த்தம் புரியா
இவ்வுலகில்
நான் ஏன் பிறந்தேன்.

குற்றவாளி நானே...!


விசித்திரம் நிறைந்த உலகமிது.
சித்திரங்களுக்கு மதிப்பில்லை.


இதோ...!
என் மனம்
இப்போது...
பிரபஞ்சத்தை
கெஞ்சி கேட்கிறது.
நண்பர்கள் இல்லா
உலகம் எது என்று ?


--இரா. சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (26-Apr-14, 4:54 pm)
பார்வை : 440

மேலே