நாம் தானே

சொல்லாமல் போனாலும்
சோர்வாக இருந்தாலும்
இல்லாமல் போவதும் நாம் தானே !

இருப்பதை விட்டு
இல்லாததை நினைத்து
ஏங்குவதும் நாம் தானே !

சுகம் என்று சொன்னாலும்
சோகம் என்று பார்த்தாலும்
உடன் படுவது நாம் தானே !

உயர்வுகள் ஒரு நிமிடம்
என்ற போது
எக்காளமிடுவதும்
தளர்வுகள் வந்த போது
தள்ளாடுவதும் நாம் தானே !

உறவுகள் நினைக்க
உண்மைகள் நிலைக்க
வரும் பொருள் காக்க
வளர்ந்தோங்கும் வாழ்வு சிறக்க
வரும் காலம் நலமென்றே
நமதென்றே பார்த்திருப்பது
காத்திருப்பது நயமாகும்.

எழுதியவர் : arsm1952 (26-Apr-14, 4:17 pm)
Tanglish : naam thaane
பார்வை : 119

மேலே