தவறாத கோட்பாடு பொள்ளாச்சி அபி
கடைக்கண் பார்வைகள்..
கலைகின்ற மௌனம்..
நினைவின் துலக்கம்..
இறக்கையின் அசைவில் தெரியும் மகிழ்வு..
கனவு மழையில் சிரித்த பூக்கள் ..
இரவின் ரகசியச் சூடு..
கூடடைந்த பறவையின் குதூகலம்..
சுவர் ஊர்ந்த பல்லியின் வேட்டை வெற்றி..
ஒளியைப் பிரதி பலிக்கும் சுவர் ..
வழிகின்ற குளத்து நீர்...
முளைக்கின்ற விதையின் பீறிடல்...
பறத்தலின் முயற்சியில் சிறு பறவை..
அளித்துவிடக் கூடும்
வாழ்கையை நிமிர்த்தி விடும் பாடங்களை...!
-------------
-[இதனை எதிரொலிக்க வைத்த
தோழர் ரமேஷ் ஆலத்திற்கு நன்றி..]--