இழிந்த தந்தை

காமத்து பசி
இன்று அந்நியனை விட
சொந்த அப்பனுக்கே .....

அந்நியன் பார்வை அற்று
பெண் மகளை காத்து
பெற்றெடுத்த அப்பனே
தன் காமப்பசியை
சொந்த மகளில் திணித்துவிட்டான்

பொத்தி பொத்தி பார்த்தவளை
தன் இளவரசியாய் நினைத்தவளை
தன் இழிந்த இயல்பால்
அவள் மனம் கிழித்துவிட்டான்

அந்நியன் பார்த்தால் பாவம்
அரவனைத்தவன் சுவைத்தால் .....?
அந்நியன் தொட்டால் தீண்டு
மடியேந்திவன் இச்சையேற்றினால் ....?

பெண் மகள் எங்கு போவாள்
பாவம் அவள் பிறப்பிலே
மிருதுவானவள் ....
அவளுக்கு என்றும் மிருகமாய்
மாறத்தெரியாது

காலம் மாறியே போயிற்ரு
மிருகம் தன் குட்டியை உண்பதுபோல்
ஆண் மகன் இன்று புசிக்கிறான்
இன்னும் கொடுமையாக
தன் சொந்த மகளை

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (27-Apr-14, 3:26 pm)
பார்வை : 107

மேலே