சிறப்புக் கவிதை 46 திலகவதி உறவெனும் காடு

உறவெனும் காடு
உறவெனும் காட்டில்
உரசிய வார்த்தைகள்
முப்புரம் எரித்த
மூன்றாம் கண் நெருப்பாய்
சினந்து படர்ந்ததில்
எரிந்தது காடு !

மனவெளி எங்கும்
அலைந்து திரிந்த
ஆணவ மிருகம்
எரியும் காடு புகுந்து
அலறும் ஓசை
திசை எட்டும் பரவ
வெஞ்சினம் பூண்டு
வெறும் சாம்பலாய்த்
தீர்ந்தது உறவெனும் காடு !

எல்லையில் எங்கும்
மழையற்றுப் போக
மேற்கு வாயில வழி
பாவங்கள் நுழைத்து
நீறு பூத்த சாம்பலை
நெருப்பாக்கித் திரிகிறோம் நாம் !
நீறும் சாம்பல் தணித்து
நட்பின் பசுமை துளிர்க்க
பிரியத்தின் பெருமழை
ஒன்று ஓயாது கொட்டட்டும்- நம்
இதயத்தின் மடித் தட்டில் !!!

எழுதியவர் : திலகவதி (27-Apr-14, 5:09 pm)
பார்வை : 310

மேலே