ஒரு காதல்

அவளை பார்த்த சந்தோஷத்தில் அழுதேன்,
துளிகள் கண்ணீராய் சிந்தின...
அவளின் வார்த்தைகள்
மனதை கழுகாய் கொத்தியதால் அழுதேன்,
துளிகள் செந்நீராய் சிந்தின...
எந்நீராய் சிந்தினாளும்
என்னவளின் இதயம் இரங்கவில்லையே...
என் காதலின் சோகமும் புரியவில்லையே.......
அவளின் நினைவுகள் கவிதையாய்
கோடி மலர்கள் மனதில் பூத்தன...
சொல்லப்போகும் வேளையில்
மலர்களோ தன் இதழை இழந்தன...
என் காதல் அவளிடத்தில்
மாய்ந்து போனதால் ஏனவோ
இயங்கும் இதயமும்
அவளுக்காக மாய்ந்து போக துடிக்குதே.........
கடல் தண்ணி வற்றி போகாதடி
கண்டதும் நெஞ்சில் காதல் பூத்ததடி...
நூல் அறுந்து போனால்
பட்டம் ஆகாச வானில் பறக்குமா?
இதயம் நின்று போனால்
காதல் என்னுடன் மாய்ந்து போகுமா?
பறக்காது பட்டம் பறக்காது ,
போகாது காதல் மாய்ந்து போகாது...........

எழுதியவர் : இதயம் விஜய் (27-Apr-14, 10:26 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
Tanglish : oru kaadhal
பார்வை : 166

மேலே