மரணத்தில் கூட இணைய முடியாது

நீ
பிரிந்தபோது
என் எதிர்காலமும்
கையை விட்டு
நடந்து போய்விட்டது

மரணத்தில் கூட
நாம் இணைய முடியாது
உன்னைப் புதைப்பார்கள்
என்னை எரிப்பார்கள்

சேர்த்து வைத்த
ஆசைகள்
இனி
மதுக்கோப்பையில்
வழிந்தோடும்

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (28-Apr-14, 4:46 pm)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 148

மேலே