மறுமுறை

மறுமுறை
நாம் சந்திக்கநேர்ந்தால்
உன் கண்களை
கட்டிப்போடு
நீ மறைத்த
உன் காதல்
கண்ணீராய் வழிவதற்கு முன்
உனது
அடையாளமாய்
நான் அள்ளிகொண்ட
சிரிப்பும்- களவுபோகும்
மீதமிருந்த
என் உடலையும்
ஈர கண்கள்
தின்றுப்போகும்

எழுதியவர் : Maheswaran (28-Apr-14, 5:02 pm)
Tanglish : marumurai
பார்வை : 69

சிறந்த கவிதைகள்

மேலே