முயற்சியில் அயர்ச்சி தவிர்ப்போம்

சிறு முயற்சிகள்
சிறந்த மாற்றத்தை தரும்
தொடர்ந்த
முயற்சிகளில்
தளர்ச்சி தவிர்ப்போம்
சில நேரங்களில்
இறுதி முயற்சி
பூட்டுக்களை திறக்க வழி வகுக்கும்
சாதாரண முயற்சிக்கும்
அசாதாரண முயற்சிக்கும்
ஒரு எழுத்து தான் வித்தியாசம் .
செய்வதை
சிறப்பாய் செய்தால்
வெற்றி எனும்
அங்கீகாரம்
முயற்சிக்கு
உறுதி
அயர்ச்சி இல்லா
முயற்சி எழுச்சி ......