முதலாளித்துவம்
மனசாட்சியை தொலைத்து
மதங்கொண்ட யானையை போல்
திரியும் முதலாளிகளே...
கொஞ்சம் உங்கள் பழைய நிலையை
யோசித்து பாருங்கள்
அப்போதாவது புரியட்டும்
எங்களின் மனநிலை...
சம்பளத்தை கொடுப்பதால் மட்டும்
நீங்கள் உயர்ந்தவர்களாகி விடமுடியாது...
குணம் என்ற ஒன்று மட்டும்
உங்களிடம் இல்லாமல் போகுமானால்
நீங்களும் குப்பைக்கு சமமே....