இந்த கல்லறையில்

கல்லறையில் பூக்கும்
கள்ளிப்பூக்களே
என் கல்லறையையும் கொஞ்சம்
நீங்கள் அலங்கரியுங்கள்
நாளை என் காதலி வருகிறாள் ....

கடற்கரை படரும்
இராவணன் மீசையே
என் கல்லறையை முற்றாக
நீங்கள் போர்த்திக்கொள்ளுங்கள்
நாளை என் காதலி வருகிறாள் ....

முற்றத்தில் சிரிக்கும்
சிவந்த ரோஜாவே
உங்கள் முட்களால் மட்டும்
என் கல்லறைக்கு வேலி கட்டுங்கள்
நாளை என் காதலி வருகிறாள் ....

பாலை வனம் வீசும்
வெப்ப காற்றே
இந்த மயானத்திலும்
உங்கள் முகம் காட்டி செல்லுங்கள்
நாளை என் காதலி வருகிறாள் ....

பௌர்ணமியை உண்ணும்
அமாவாசையே
உங்கள் காரிருரால்
என்னை புதைத்திடுங்கள்
நாளை என் காதலி வருகிறாள் ....

நான் இருக்கும் வரை
அவள் என்னை நெருங்கவில்லை
கல்லறையை சேர்ந்த பின்
எனக்காய் கவலை படுகிறாள்

நான் கல்லறை சேர்ந்தும்
அவளை வாழ்த்துவேன்
அவள் எங்கிருந்தாலும்
இருக்கட்டும் புன்னகையோடு
நான் இருப்பேன் அவளுக்காய்
இந்த கல்லறையில்

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (30-Apr-14, 9:56 am)
Tanglish : intha kallaraiyil
பார்வை : 119

மேலே