சொந்த ஊருக்கு பயணம்

கொடிய வெயிலில் நெடிய பயணம்
தண்டவாளம் கூட உருகி போகும்
கரிய புகையோ என்ஜின் மறைக்கும்
வளையும் நேரம் கோலம் போடும்

ஒரு ரயில் பெட்டியில் உள்ள கூட்டம்
பெரிய மைதானம் இரண்டை நிறைக்கும்
அனல்காற்று மிகுந்த கஷ்டம் கொண்டு
இரு பயணியரிடையே நுழைய பார்க்கும்

பெரியோர் இளைஞர் சிறுவர் ஆட்டுக்குட்டி
தமிழர் தெலுங்கர் கூட சில சௌரஷ்டிரர்
இருக்க நிற்க நடக்க ஏன் வாயில்படி கூட
நிறைந்து வழிய ஒரு மினி பாரதவிலாஸ்

ரயில் பெட்டிக்குள்தான் இப்படி என்று
தப்புகணக்கு போடாதீர் ரயில்கூரையில்
மக்கள்தொகையில் மீதி எண்ணிக்கை
உயிரை கையில் பிடித்து பயணிக்கும்

இவ்வளவுக்கும் அனைவர் முகத்திலும்
களைப்பு வியர்வை கசகசப்பு மத்தியில்
வேறுவழியின்றி எடுத்து கொண்ட கடிய
பயணமுடிவில் என்னதான் எதிர்பார்ப்பு

சொந்த ஊருக்கு கோடை விடுமுறைக்கு
சிறப்பு ரயில்கள் கூடுதலாக பேருந்துகள்
இருந்தும் கூட்டம் அலைமோதுகிறது என்ற
செய்தி குறிப்பு பார்த்தேன் யோசித்தேன்

நகரங்களில் வேலைநிமித்தம் குழந்தைகள்
கல்விக்கூடங்கள் கல்லூரிகள் காரணமாக
வசிக்கும் எங்கள் ஊர்காரன் விடுமுறைக்கு
விட்டால் பொடிநடையில் கூட சென்று விடுவான்

எழுதியவர் : கார்முகில் (30-Apr-14, 10:22 am)
பார்வை : 396

மேலே