வாலி

(கவிஞர் வாலியின் உருவபடத்தை பார்த்தபொழுது என் நினைவில் பட்டவை)

உன்னைப்போல்
கவிஞன் - பிறப்பதுமில்லை
உன் விரலில்
உருபெற்ற கவிதையோ
என்றும் இறப்பதில்லை .

சாதாரண வாழ்கையை
அசாதரணமாக
உரைத்த கோமகனே!
இந்த
நிசப்த உறக்கம்
உடலுக்கு அன்றி
உன் படைப்புக்கு அல்லவே?

பல பாட்டுக்கு
பல்லாக்கு சுமந்த பாவலனே
உன்னை
கிழக்கில் பறித்து
மேற்கில் விதைத்தவன் யாரோ?

உன்
சிதையை சிதைக்கும்
தணலும் கண்கலங்குதைய

உன்னை சுமந்த
பாடையும்
ஒப்பாரி வைக்குதையா

உந்தன் உயிரான
எழுத்துகளில்
சுவாசிக்கும்
இதயங்கள் எங்குப்போகும்மையா

எங்கள் காவிய தலைவனே!
உன்
சிந்தனை பிரபஞ்சத்தை
இருள் கவ்வியதோ?

காவியங்கள்
தீட்டிய
தூரிகைதான் உடைந்ததோ?

நீ
கற்பனை வாளெடுத்து
போர்தொடுத்த
அத்தனை பிரபஞ்சம்
மௌனதீயில் அகப்பட்டதோ?

எழுத்து கணைகளில்
வேற்று கிரகம் பறந்த - அறிஞனே!

சிந்தனை தீபொறியில்
பகுத்தறிவு ஒளி - ஏற்றியவனே!
காதலா? - காவியமா?
இலக்கியமா? - நாடகமா?
சமூகமா? - குடும்பமா?
எதை விட்டுவைதாய் ?
உன்னை இலகுவாய் மறப்பதற்கு.
அத்தனையும்
உன் தமிழில்
இனிக்குதே
இன்னமும்
என் போன்ற நெஞ்சகளில்.

எங்கள் காவிய புலவனே!
உன் பாதையில்
ரசிகனாய் நாங்கள்
எங்கள் பாதையில்
நிழலாய் நீ
என்றும்
எங்கள் நினைவில்
அணையா விளக்காய்...

அய்யா வாலியை வணகுகிறேன்.

எழுதியவர் : Maheswaran (30-Apr-14, 4:36 pm)
Tanglish : vaali
பார்வை : 283

மேலே