மட்டுநகர் விஜயராஜாவின் 185022-ஐப் படித்தபோது
185022-மட்டு நகர் விஜயராஜா பாடல் தந்த கற்பனை இது-அவருக்குப் பாராட்டுக்களுடன்
பார்க்கத்தான்! பார்த்து மூழ்கத்தான்!
பார்வையில் பட்டு விட்டால்!
வேர்க்கத்தான்! வெப்பம் நீக்கத்தான்!
வீழ்ந்து, திளைக்க நேர்ந்தால்!
சேர்க்கத்தான்! செழிப்புச் சிந்தத்தான்!
சிறந்தபயன் விளைந்து விட்டால்!
ஈர்க்கத்தான் அவனே இவைபடைத்தான்!
இதைரசித்தான் கவிஞன் தானே!
==== +++ ==== +++ =====

