+சிறிய எண்ணத் தூரல்+
வருத்தங்களை
இறக்கிவிடும்
பேருந்து
நிறுத்தங்களே
புன்னகை!
ஆறுதல்களை
ஏற்றிச்செல்லும்
பேரிதய
பெட்டகமே
நம்பிக்கை!
மனசுக்குள்ளே
இதம்கொடுக்கும்
பண்பொலியின்
பாடல்களே
நட்பு!
எதிர்பார்த்து எதிர்பார்த்து
கடைசிவரை கிடைக்காத
நடத்துனரின் சில்லறையாய்
சிலருக்கு
வாழ்க்கை!

