+தொழிலாளர் தின மே 1+

தொழிலாளர் தினமே தொழிலாளர் தினமே
மறக்காமல் வருட மொருமுறை வந்திடுமே
உழைப்பாளி மனமே உழைப்பாளி மனமே
இதைகூட நினைக்க மறந்தே உழைத்திடுமே

எத்துணை உழைத்தென்ன ரத்தத்தை இழந்தென்ன‌
சகதியில் விழுந்தேதான் புழுதியில் உழைத்திடுவர்
அத்தனை உழைப்புக்கும் சுத்தமாய் பலனில்லை
உயிர்போக உழைச்சாலும் வயிர்நிறைய வழியில்லை

கௌரவம் அதுஎங்கே மரியாதை அதுமங்க‌
உழைப்பாளர் தினத்தன்று உயர்ந்தெங்கே போயிடுவார்
பணமென்ன பொருளென்ன ஒருமண்ணும் வேண்டாங்க‌
நட்பாக சிரிச்சாக்க மொதலாளி ஆகிடுவார்
==================மனசாலே மொதலாளி ஆகிடுவார்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (30-Apr-14, 11:28 pm)
பார்வை : 3462

மேலே