பாதணித்துவ உழவர் ஆட்சி-மே 01-

இரத்த யுத்தங்களை – பூமியினில்
சத்த சாகசமாய்
நொய்து செய்து
சொத்தில்லாமலே செத்து மடிகிறான்
நர்த்தன விவசாயி !!
~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சேற்றினில் செருப்பாய்த் தோய்ந்தும்
உடல் பிரியா ஆவியோடு
ஒரு வாய் சோற்றுக்காய்
இக்காலும் கொட்டாவியோடு
அலைகிறான் அப்பாவி!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆங்கிலேயனின் காலணித்துவம்
மட்டமாகிறது
முதலாளிகளின்
பாதணித்துவத்தின் கீழ் !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தொழிலாளி ஒருத்தனின்
வியர்வைத் துளிகள்
சொல்லலும் தத்துவத்தை தந்ததா
அரிஸ்டோட்டிலின் புத்தகம்???
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முதலாளி ஒருத்தனின்
சால்வைத் துண்டு
துடைத்திருக்குமா –தொழிலாளி
ஒருத்தனின் வியர்வைத் துளிகளின்
சந்தன நாற்றத்தை???
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காலையின்றி மாலையின்றி
காளையோடு வேலையின்றி
மோதி விளையாடும் - ஊழர்
கூட்டம் ஒருபுறம்

இவன் பசி
அவன் பசி
எவன் பசியாற்றவும்
ஓட்டத்தோடும் வாட்டத்தோடும்
காளை கட்டி
ஏரிழுத்து பூமியோடு புரட்சித்து
பூவுலகுக்கு புண்ணியம் சேர்க்கும்
உழவர் கூட்டம் மறுபுறம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சதை ருசித்து
மது குசித்து
எருது தின்று
விருது என்று
மானிடப் புகழ்ச்சிக்காய்
போர்த்தப்படும் பொன்னாடைக்கு

மறு ஆடை மாற்ற ஆடையின்றி
எருதோடு விருது பெறும்
உழவனின் கோவணத்துக்கு
ஈடாமோ ?

அந்தப்
பொன் ஆடையும் பெண் வாடையும்!!
எருதிறைச்சியும் விருதுப் புகழ்ச்சியும்!!
இவையெல்லாம்
இவன் கோவணக் கிழிசல்களின்
அழகுணர்ச்சியைக் கெடுக்கிறதே !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சட்ட யாப்புகளுக்கு ஆப்பிறுக்கி
விவசாய விடியலின் தடயமாய்
அரியாசன ஆட்சியில்
தொழிலாளியின் மோட்சம்
விமோசனம் பெற
வழி வகு இறைவா !!!
~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~
~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~+~

எழுதியவர் : இமாம் (1-May-14, 11:53 am)
பார்வை : 193

மேலே