மொழி
மொழி
------------
அம்மா என்கிற அமுத மொழி
குழந்தை பேசும் முதல் மொழி
இறைவன் தந்த மறை மொழி
சேய் தாயிடம் பெற்ற மற்ற மொழி
தந்தை என்கிற இரண்டாம் மொழி
தந்தை தனயனுக்கு ஓதுவது
இறைவன் என்கிற மூன்றாம் மொழி
பள்ளியில் குழந்தை கண்ட மொழி
குரு என்ற நான்காம் மொழி
அலுவலகத்தில் அவன் காணும் மொழி
இயக்குனர் என்கிற ஆறாம் மொழி
மனைவியிடம் அவன் காணும் மொழி
புன்னகை என்கிற காதல் மொழி
குடும்பத்தில் அவன் கண்ட மொழி
பொறுமை என்கிற மௌன மொழி
வாழ்கையின் இலக்கணம் இவ் எட்டு மொழி
அவன் நெஞ்சில் இறுதியில் நிற்பவை
"அம்மா","இறைவா" என்னும் மொழிகளே !
------------------------------------------------------------------------------