பள்ளிப்பருவம்
அந்த நாள்
ஞாபகம்
நெஞ்சிலே
நின்றதே !
நின்ற ....தே .......
நின்றதே ....
இந்த நாள்
அந்த நாள்
ஞாபகம்
வந்ததே
வந்ததே
அது ஏன்?? ஏன்?? ஏன் ???
===============================================
பால்ய வயதில்
பள்ளி பருவத்தின்
பரவசமான
நினைவுகளின்
பட்டியல் இதோ ............
திரும்பி பார்ப்போம் ...
அட்டை போட தெரியாமல்
அண்ணனிடம்
கெஞ்சிய நாட்கள் ======..
பிறந்த நாள்
புது உடை அணிந்து வர
364 நாள் ஏக்கங்கள் ======...
நண்பர்கள் என்ற
சொல்லுக்கு
இலக்கணம்
அறிந்த நாட்கள் =====
குச்சி ஐஸை
ருசி பார்த்து
சப்பும் போது கீழே
தவற விட்ட நேரங்கள் =======
ஆசிரியரிடம்
ஸ்கேலால் அடி வாங்கி
அடி வலித்தாலும்
அடக்கமாய் வலியை
விழுங்கிய நாட்கள்===== ..
முதல் முதலாய்
சாக் பீசால்
கரும் பலகையில்
எழுதிய அனுபவம்
பெருமையில்
பட்டாம் பூச்சியாய்
பறந்த நேரங்கள் ======
சிகப்பு நிற மையால்
ஆசிரியரிடம் "நன்று" வாங்கிய
தாட்களை
பாதுகாத்த நாட்கள் ========
பள்ளி மணி ஒலித்த
அடுத்த நிமிடம்
மதிய உணவை எடுத்து கொண்டு
ஓடிய நேரங்கள் .===========
தேசிய கீதத்திற்காக
உடலை சிறிது கூட
அசைக்காமல்
நின்ற நிமிடங்கள் =====
தலைமை ஆசிரியர் வரும் போது
தலை குனிந்து
சென்றவுடன்
வீர வணக்கம்
போட்ட தருணங்கள் ====
கடைசி வரிசையில்
அமர்ந்து ஆசிரியரை
கலாய்த்த
கலகலப்பான நேரங்கள்
முதல் காதலை
மிருதுவாய்
உணர்ந்த
தருணங்கள் =======
புத்தகங்களின்
இடையே
ரம்மியமான
உறக்கங்கள் =======
மனப்பாட பகுதியை
மனமில்லாமல்
மாங்கு மாங்கு என
படித்த நேரங்கள் =====
முதல் முறை
பேனாவை தொட்டு
மையால்
உலகத்தில்
வார்த்தைகளை
அறிமுக படுத்திய தருணங்கள் =====
பள்ளிக்கு தாமதமாய் வந்து
மைதானத்தை
மூன்று முறை சுற்றிய நாட்கள் =======
கமர்கட்டை
கடிக்க முடியாமல்
இனிப்பை நாக்கின் அடியில்
சுவைத்து இனிப்பில் மகிழ்ந்த நிமிடங்கள் ====
வெண்ணிற மேல் சட்டையில்
நீல நிற மை பட்டு
அம்மாவிற்கு பயந்த நேரங்கள் ========
=============================================
உன்னதமான நாட்கள்
மனதை தொடும் நாட்கள்
திரும்ப பெற முடியாத நாட்கள்
என்றென்றும் மனதில் நிற்கும் நாட்கள்.
ஒவ்வொரு மனிதனும்
கல்வி என்ற வீட்டை கட்ட
அஸ்திவாரம் போட்ட நாட்கள்
ரசிப்போம்
ரசனையில்
மகிழ்வோம்!