எழுது கோல்
எண்ணங்களை
எழுத்தில் ஏற்றும்
கோல்
எழுத்துக்களை
ஓவியமாய்
தீட்டும் கோல் ..
சிந்திக்க வைத்து
சீர்திருத்தங்களை
செயல்படுத்தும் கோல்
கூரான
முனையனாலும்
மலர் போன்ற
எழுத்துக்களால்
தோரணம் அணிவிக்கும் கோல்
எழுது கோலை
முறையாய் பயன் படுத்துவோம் !