புத்தனாக

மனம் முழுக்க ஆசை
புத்தனாக
தடுக்கும் ஆசை.

யானைதான்
தெரியவில்லை
மதம் பிடித்தது.

ரத்த அழுத்தம்
அளக்கும் கருவி
காட்டவில்லை இதயத்தை.

நல்ல வேடம்
கள்ள வேடம்
தெரியவில்லை முகமுடி

எழுதியவர் : (2-May-14, 3:15 pm)
சேர்த்தது : Ramajayam
பார்வை : 109

மேலே