கடல்

வில்லங்கம் ஏதுமில்லை
பத்திரத்தில்
பிரிந்தது சொந்தம்.

அள்ள அள்ள குறையவில்லை
கொடுக்கிறது
கடல்.

விரிவாய் எழுதிய
பத்திரத்தில் இல்லை
பெற்றெடுத்த வலி.

சொத்து மதிப்பு
சொன்ன பத்திரம்
மறந்தது தாய்பால் விலை.

எழுதியவர் : க.இராமஜெயம் (2-May-14, 7:18 pm)
சேர்த்தது : Ramajayam
Tanglish : kadal
பார்வை : 98

மேலே