மஉச
வாழ்க்கை என்பதே வருத்தங்கள்! ஆயின்
வலியில்லா வழி காணும் வசந்த காலம் எப்போது!
பயம் கொண்டே பழகிவிட்ட
மனம் வெறுக்கும்? பணம் வேண்டும்!
பணிச்சுமையின் விடியல் தான் எப்போது!
சோகங்களின் சொந்தங்கள்!
ஆனந்தத்தை அள்ளும் நாள் எப்போது!
வாழ்க்கை ஓர் சமூக சூழல்!
இதில் சுமுக வாழ்வு என்பது?
ஓர் சவால்!அறைக்கூவல்!
சவாலே! சமாளி!
ம.உ.ச(மகனே உன் சமத்து )!

