குழம்பிய மரியாதை

மரியாதை அங்கு உள்ளோர்
மனத்துள் ஏறிக் கொண்டது .

அனைவரும் எழுந்து நின்றனர் ,
அழுத்தமாகவும்
சிரித்துக்கொண்டும்
வணக்கம் சொன்னனர்.

மரியாதையே கூட
தன்னை அறியாமல்
மரியாதை நிமித்தம்
வணக்கம் சொன்னது.

பெரும் பதவியிலுள்ள
பிரபலமான செல்வந்தராம்
வந்தவர் ,

தனக்குள் குழம்பியது மரியாதை ,
நான் உபயோகப்படுவது ...

மனிதனுக்கா..?
செல்வத்துக்கா...?
பதவிக்கா ..?
பிரபலத்துக்கா ..?

மனிதம் என்றால்
என்னவாக இருக்கும்..?

எழுதியவர் : மின்கவி (2-May-14, 9:11 pm)
பார்வை : 711

மேலே