மொக்க கவிதை Mano Red

அன்பே,
ஆருயிரே,
என்னை விட்டு எங்கே போனாய்..??
அவள் எங்கே போனால் என்ன
அப்படியே ஓடி விடட்டும்...!!

அவளைப் பார்க்காமல் என்னால்
சாப்பிடவே முடிவதில்லை..!!
அப்படி ஒரு கேவலமான
சாப்பாடு நான்
பார்த்ததும் இல்லை..!!

கனவில் கூட
என்னை துரத்தி துரத்தி
காதல் செய்கிறாள்...!!
அந்த நாசமாப் போன தூக்கமும்
அடிக்கடி வருகிறது...!!

எப்போதும்
அவளைப் பற்றிய
உள் நினைவு தான்...!!
என்ன செய்தால் எனக்கு
ஞாபக மறதி வரும்...?

அவளின் சிரிப்புக்கு
நான் அடிமை...!!
அப்படி ஒரு
சிரிப்பை பார்ப்பதற்கு
பேசாமல் காலில் விழுவதே மேல்..!!

மொத்தத்தில் அவள்
மொக்க கவிதை தான்..!!
இருந்தாலும்
பொய் சொல்லலாமே
மிக அழகானவளும் அவளே...!!

எழுதியவர் : மனோ ரெட் (3-May-14, 11:22 am)
சேர்த்தது : மனோ ரெட்
பார்வை : 67

மேலே