இருட்டு உலகம்

வியர்வை சிந்தியவனும்
வீட்டில் முடங்கி கிடப்பவனும்
நிஜ உலக வாழ்வை
மறந்து இருட்டு உலகில்
பயணிக்க இதமாய்
ஒரு மருந்தாய்
போதை.....

பாதை மாற்றும் போதை
பாதையில் விழ வைக்கும் போதை
பார்வை இழக்கும் போதை
ஈரலை வீழ்த்தும் போதை

எதற்கு இந்த போதை
துயரமா..
துக்கமா..
அளவுக்கு மீறிய ஆசை
ஆசை நிராசை ஆகும் போது
இதய குமறலை
ஈடு கெட்ட
உற்சாக பானம்
ஊனம் ஆன
எண்ணங்களுக்கு
ஏணியாக
ஐயம் கலந்த ஓடையில்
ஒருத்தன் வாழ்வுக்கு
ஓடமாய்...


இருட்டு உலகம்...
திருட்டு உலகம்
குருட்டு உலகம்
புரட்டு உலகம்


மாறினால் மாற்றம்
மீறினால் ஏமாற்றம்

எழுதியவர் : (3-May-14, 1:02 pm)
Tanglish : eruttu ulakam
பார்வை : 120

மேலே