எப்படி தெரிஞ்சிக்கிறது

மருத்துவர்களின் மேலதிகாரி : நீங்கள் அனைவரும் புதிதாக மருத்துவ படிப்பு முடித்துவிட்டு இந்த மனநலம் குன்றியோர் மருத்துவ மனையில் பணியாற்ற வந்திருக்கிறீர்கள் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன் உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்தால் கேட்கலாம் .
ஒருவர் : Docter இங்க உள்ள பைத்தியங்களுக்கு சரி ஆயிடுச்சா இல்லியான்றத எப்படி தெரிஞ்சிக்கிறது?
மருத்துவர்களின் மேலதிகாரி : நல்ல கேள்வி
முதலில் அவர்களுக்கு அனைத்து பொருட்களும் அனைத்து காலங்களும் புரியவேண்டும் மற்றும் வித்யாசப்படுத்தி பார்க்கும் அளவிற்கு விவரம் தெரியவேண்டும்
ஒருவர் : அது எப்படி DOCTER ?
மருத்துவர்களின் மேலதிகாரி : சரி நீங்கள் சொல்லுங்கள் இப்பொழுது காலையா மாலையா?
ஒருவர் : இப்பொழுது இரவு
மருத்துவர்களின் மேலதிகாரி : : சரியாக சொன்னீர்கள். அடுத்தது இது என்ன ( கையில் இருக்கும் PHONE ஐ நீட்டி)
ஒருவர் : கடிகாரம்
மருத்துவர்களின் மேலதிகாரி : சரியாக சொன்னீர்கள்
(மற்ற அனைத்து புதிய மருத்துவர்களும் கவனமாக கேட்டுக்கொண்டிருக்க )
மற்றொருவர் அங்கிருந்து ஓடி வந்து : SIR நீங்க எல்லாம் இங்க என்ன சார் பண்றிங்க
கூட்டத்தில் புதிய மருத்துவர் : SIR மருத்துவர்களின் மேலதிகாரி தான் எங்கள இங்க நிக்க சொன்னார்
மற்றொருவர் : கடவுளே SIR அவன் ஒரு பைத்தியம் சார்
கூட்டத்தில் புதிய மருத்துவர் : SIR ரொம்ப தெளிவாபேசுறாரு சார்?
மற்றொருவர் : : அதனால தான் SIR பைத்தியம் ஆயிட்டாங்க
கூட்டத்தில் புதிய மருத்துவர் : SIR அப்போ கேள்வி கேக்குறவரு
மற்றொருவர் : அந்த பைத்தியம் எப்படி SIR உங்க கூட்டத்துல வந்தான்???
கூட்டத்தில் புதிய மருத்துவர்கள் : !!!!!!!!!!!!
( உச்சி வெயிலு அடிக்கும் போது இரவுன்னு சொன்னானே அப்பவே நாம புரிஞ்சிக்கிட்டு இருந்திருக்கணும் எல்லாரையும் நிக்கவெச்சி வரவேற்ப்பு கொடுத்துட்டானுன்களே !!!! )