அறிவாய் விரைவில்
நினைப்பாய்...கண்ணாடி முன் நிற்கையில் உன் முன் தெரிவது நீதான் என்று,
மறப்பாய்....உன் வலது கண்ணாடியின் இடது என்பதை கூட தெரியாமல்.
நினைப்பாய்...நிழலாய் காலடியில் தோன்றி ,உன் கூடியே வருவது நீதான் என்று,
மறப்பாய்....நிமிடத்திற்கு ஒரு விதம் மாறும் மாயை அதுவென்பதை.
நினைப்பாய்...மரக்கன்றுகளை வெட்டி மாடி வீடு கட்டியது அறிவென்று ,
அறிவாய்....விரைவில் உன் செயல் மிகப்பெரிய தவறென்று.